Oct 17, 2024 - 03:22 PM -
0
சர்வஜன அதிகாரத்தின் தலைவர், கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித் ஜயவீர, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான விருப்பு எண்ணை பெற்றுக் கொண்டதன் பின்னர் முதன்முறையாக இன்று (17) கம்பஹா மாவட்டத்தில் உள்ள மகா சங்கத்தினரை சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.
அக்கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வஜன அதிகாரத்தின் தலைவர் கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகாரத்தின் மாவட்ட வேட்பாளர்களான பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்டோர் இன்று காலை கம்பஹா விகாரைகளுக்கு சென்று மகா சங்கரத்தினரிடம் ஆசி பெற்றனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்து விருப்பு இலக்கங்களைப் பெற்ற பின்னர் அவர்கள் வருகை தந்துள்ளனர்.
முதலில் பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு சென்ற குழுவினர் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவ வஜிர தேரரிடம் ஆசிபெற்றனர்.
அதன் பின்னர் களனி ஸ்ரீ பஞ்சானந்த விகாரைக்கு சென்ற திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் அமரபுர சத்தம்ம வம்ச மகா நிகாயாவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரரை சந்தித்து ஆசிபெற்றனர்.
அதன் பின்னர் திலித் ஜயவீர உள்ளிட்டோர் பியகம போத்திருக்கராமயவிற்கு சென்றனர்.