Oct 17, 2024 - 08:41 PM -
0
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
தம்புள்ளையில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் Rovman Powell 37 ஓட்டங்களையும், Gudakesh Motie 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Maheesh Theekshana மற்றும் Wanindu Hasaranga தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி இலங்கை அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.