வணிகம்
செலிங்கோ லைஃப்பின் வருடாந்த விளையாட்டு விழாவில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு

Oct 18, 2024 - 10:49 AM -

0

செலிங்கோ லைஃப்பின் வருடாந்த விளையாட்டு விழாவில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு

இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணி வகிக்கும் செலிங்கோ லைஃப்பின் வருடாந்த விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக செலிங்கோ லைஃப்பின் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொழும்பில் உள்ள சுகததாச மைதானத்தில் அண்மையில் ஒன்றுகூடினர்.

அன்றைய தினம் நடந்த தடகளப் போட்டி முடிவின்போது 'AS' குழு வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதுடன் 'PK' குழு இரண்டாம் இடத்தை பெற்றது.

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீரராக ‘NS/KS’ குழுவைச் சேர்ந்தஆர் .எம். ஃபர்சாத் தெரிவானார் மேலும் சிறந்த தடகள வீராங்கனையாக ‘PK’ குழுவின் ஜி.கே.எஸ் மதுவந்தி தெரிவு செய்யப்பட்டார்.

தடகளப் போட்டி நிகழ்வுகளுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் கிரிக்கெட் கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் ‘AS’ குழுவும் பெண்கள் போட்டியில் ‘PK’ குழுவும் வெற்றி பெற்றன. கரப்பந்தாட்டப் போட்டியில் ‘ST’ குழுவும் வலைப்பந்தாட்டப் போட்டியில் ‘PK’ குழுவும் வெற்றி பெற்றன.

செலிங்கோ லைஃப் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு துஷார ரணசிங்க அவர்கள் வெற்றி பெற்ற அணிக்கும் மற்றும் தடகளப் போட்டியில் சிறந்து விளங்கிய ஆண் மற்றும் பெண் வெற்றியாளர்களுக்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குதை படத்தில் காணலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05