செய்திகள்
UGC யின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Oct 18, 2024 - 11:28 AM -

0

UGC யின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அத்தோடு ஆணைக்குழுவின் உப தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார நியமிக்கப்பட்டிருப்பதோடு, அதன் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பேராசிரியர்களான ராஹுல அதலகே, ஓ.ஜீ. தயாரத்ன, சுப்ரமணியம் ரவிராஜ் மற்றும் சட்டத்தரணி கே.சீ.டபிள்யூ. உனம்புவ உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05