செய்திகள்
பன்றிகளின் சடலங்களால் சிரமத்தில் மக்கள்!

Oct 18, 2024 - 06:33 PM -

0

பன்றிகளின் சடலங்களால் சிரமத்தில் மக்கள்!

ஜா-எல தண்டுகம பிரதேசத்தின் கால்வாய்களில் சிலர் இறந்த பன்றிகளின் சடலங்களை வீசி சென்றுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

பன்றி பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் பன்றிகள் இவ்வாறு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இதற்கிடையில், இந்த வைரஸ் நோயை கருத்தில் கொண்டு, கால்நடை சான்றிதழ் இல்லாமல் மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர்  ஹேமாலி கொத்தலாவல இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மேற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பன்றிப் பண்ணைகளைச் சுற்றி பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக பன்றிகள் பெருமளவில் உயிரிழக்க தொடங்கியுள்ளன.

 

இந்நோய் தாக்கிய இரண்டு நாட்களில் கால்நடைகள் இறந்து விடுவதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05