Oct 19, 2024 - 12:07 PM -
0
எங்களது பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் அதன் போது தான் எங்களின் சமூக பிரச்சினைகளை நாங்கள் இந்த தேசத்திற்கு கொண்டு வர கூடியதாக காணப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டி மாயாவ மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்று போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களது நாட்டில் யார் ஜனாதிபதியாக இருக்கின்றார் யாருடைய அரசாங்கம் யாருடைய கட்சி அரசாங்கம் இருக்கின்றது என்பதை தாண்டி அந்த அரசாங்கத்தில் எங்களது உறுப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டிலே இன்று npp அரசாங்கம் இருக்கின்றது அநுர குமார திசாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார். ஆனால் அவர் ஜனாதிபதி ஆகும் போது அவர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்திருக்கிறது என்று என்ற கேள்வியை நாங்கள் கேட்க வேண்டிய இருக்கின்றது.
மக்கள் மீது வாரி சுமை அதிகமாக இருக்கின்றது VAT வரியை நாங்கள் நீக்குவோம் அதே போல உழைக்கும் போது செலுத்துகின்ற வரியை நாங்கள் குறைப்போம் என்று எல்லாம் கூறியவர்கள் இன்று அது பற்றி பேசுவதாக இல்லை அதே போல் பெற்றோல், டீசல் மீது விதிக்கப்படுகின்ற வரிகள் அதிகம் அந்த வரியை குறைத்து நாங்கள் விலைகளை குறைப்போம் என்றார்கள். ஆனால் அதை பற்றி இன்று அவர்கள் பேசுவதாக இல்லை.
அதனையும் தாண்டி நாங்கள் ஒன்று சொல்ல வேண்டும் கண்டி மாவட்டத்தின் உடைய தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமையை அழிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதி திட்டம் திட்டப்பட்டு இருந்தது. அந்த சதி திட்டத்தில் இருந்து விடுபட்டு நான் என்னுடைய முடிவை எடுத்தேன் என தெரிவித்தார்.
--