செய்திகள்
39 வருட சாதனையை தகர்த்த 16 வயது மாணவி!

Oct 19, 2024 - 01:02 PM -

0

39 வருட சாதனையை தகர்த்த 16 வயது மாணவி!

இலங்கையின் இளம் தடகள வீராங்கனை தருஷி அபிஷேகா 39 வருடங்கள் பழமையான இலங்கை கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) தடகள சாதனையை இன்று (20) முறியடித்துள்ளார்.

 

கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை தடகளப் போட்டியில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4:29.99 நிமிடங்களில் நிறைவுசெய்ததன் மூலம் அவர் இந்த தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

 

1985 ஆம் ஆண்டு தம்மிகா மெனிகே 4:35.7 வினாடிகளில் படைத்த கனிஷ்ட இலங்கை சாதனையை 16 வயதான தருஷி இவ்வாறு முறியடித்தார்.

 

தருஷி கம்பளை விக்கிரமபாகு மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியாவார்.

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05