செய்திகள்
சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் ஆரம்பம்!

Oct 19, 2024 - 01:41 PM -

0

சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் இன்று (19) ஆரம்பமானது.

 

பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் தொழில் முனைவோர்  திலித் ஜயவீர அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சேயா விற்கு விஜயம் செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

 

இதேவேளை, கலகெடிஹேன பிரதேசத்தில் நேற்று (18) நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட பிரிவு தலைவர் சந்திப்பில் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவும் இணைந்துகொண்டார்.

 

"எங்களிடம் உள்ள பணத்தை செலவழிக்கும் அரசியலை நாங்கள் செய்கிறோம், யாரிடமும் பணம் பறிக்கும் அரசியலை செய்யவில்லை. இந்த நாட்டின் பொருளாதாரம் என்ன வளர்ச்சியடைந்தாலும், இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்."
"இது எங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த முறை பெறுபேறுகள் ஆச்சரியமான பெறுபேறாக இருக்கும்." என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05