Oct 19, 2024 - 03:19 PM -
0
மின்னேரிய-ரொடவெவ சந்திக்கு அருகில் நேற்று (18) ரயிலில் மோதுண்டு காயமடைந்த யானைக்குட்டிக்கு வனஜீவராசிகள் அதிகாரிகள் சிகிச்சை அளித்து காட்டுக்குள் விடுவித்துள்ளனர்.
கொழும்பு - மட்டக்களப்பு பிரதான புகையிரத மார்க்கத்தில் நேற்று (18) காலை பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயிலுடன் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு குட்டி காயமடைந்திருந்தது.
அதன்படி மகாவலி பிராந்தியத்திற்கு பொறுப்பான வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் யானைக்குட்டிக்கு சிகிச்சை அளித்து மின்னேரிய காப்புக்காடுக்கு விடுவித்தனர்.
காட்டு யானைக்கு சிகிச்சை அளித்த மகாவலி பிராந்தியத்திற்கு பொறுப்பான வனவிலங்கு கால்நடை மருத்துவர் சமீர கலிங்கு ஆராச்சி கூறுகையில், காயமடைந்த குட்டிக்கு சுமார் 8 வயது என தெரிவித்தனர்.