Oct 19, 2024 - 03:41 PM -
0
தெதுறு ஓயாவில் பரவியுள்ள 'Giant Snakehead'எனப்படும் மீன் இனம் நீர்த்தேக்கத்தில் உள்ள ஏனைய மீன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் அது மனித பாவனைக்கு உகந்தது என வடமேற்கு மாகாண கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மீன்கள் பரவியுள்ள தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள மூன்று இடங்களில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெதுறு ஓயாவில் பரவியுள்ள 'Giant Snakehead'மீன் இனம் காரணமாக மீன்பிடி செயற்பாடுகள் குறைந்து தொழில்துறைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு காரணம் 'Giant Snakehead'மீன் இனம் ஏனைய மீன்களை விழுங்கும் என கூறப்படுகிறது.
தெதுரு ஓயாவை அண்மித்த பகுதியில் மஹவ - கட்டுவன்னாவ, கனேவத்த - கெகுலாவல மற்றும் வாரியபொல - தம்பராவ ஆகிய பகுதிகளிலும் இந்த மீன் வகைகள் அதிகளவில் காணப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுடன் வடமேற்கு மாகாண கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் விசேட ஆய்வொன்றை மேற்கொண்டு குறித்த மீன் வகை மனித பாவனைக்கு ஏற்றது என உறுதிப்படுத்தியுள்ளனர்.