செய்திகள்
வாகனங்கள் சில ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Oct 19, 2024 - 05:48 PM -

0

வாகனங்கள் சில ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இன்று (19) பிற்பகல் காலியில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில், குருந்துகஹா மற்றும் வெலிப்பன்ன நுழைவாயில் இடையே, 66 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

வாகனம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

Comments
0

MOST READ