Oct 19, 2024 - 06:53 PM -
0
நடிகர் தனுஷ் மற்றும் அவர் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் அவர்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் இவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவருமே ஆஜராகவில்லை.
இதனால், இவர்கள் இருவருமே மீண்டும் இணைய உள்ளார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான சுபைர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
அதில், "ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி மற்றும் இரு தரப்பினரின் குடும்பங்களும் பல முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால், அப்போது செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க இவர்கள் இருவரின் மனதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டு இருவரும் இணையும் முடிவில் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் இணைவதற்கு இரு மகன்களுக்கும் முக்கிய பங்கு இருக்கலாம், ரஜினியின் உடல் தற்போது சரி இல்லாத காரணத்தினால் அவர் மன நிம்மதிக்காக இந்த முடிவை ஐஸ்வர்யா எடுத்ததாக கூறப்படுகிறது" என தெரிவிக்கப்படுகிறது.