உலகம்
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் 11 பேர் பலி

Oct 19, 2024 - 09:20 PM -

0

இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் 11 பேர் பலி

காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் இன்று (19) நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

 

இதற்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டு ஒரு மணிநேரத்திற்குள் நடந்த இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தினர் என கூறப்படுகிறது. பலியான அனைவரும் மகஜி அகதிகள் முகாமில் தங்கியிருந்து உள்ளனர்.

 

இதனை, டெய்ர் அல்-பலா பகுதியில் அமைந்துள்ள அல்-அக்சா மருத்துவமனை தெரிவித்து உள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாம் மீது நேற்று மாலை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 33 பலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 21 பேர் பெண்கள் ஆவர். 85 பேர் காயமடைந்து உள்ளனர்.

 

இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் இன்று நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05