Oct 19, 2024 - 09:43 PM -
0
நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு பலமான எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப தனது குழுவிற்கு அதிகாரம் வழங்குமாறு, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து, இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், "இப்போது ஜே.வி.பிக்கு வாக்களித்த 47% பேர் அதே தோழர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாம் கருதினால், அது தவறான அனுமானம். அப்படி நினைத்தாலும் மீதி 57% வீதமானவர்கள் அரசியல் சார்பு இல்லாத வாக்காளர்களாகிவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்க்கட்சிக்கு போக முடியாது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அந்த பங்கை சரியாக செய்யாததால், மூன்றாவது சக்தியை ஜனாதிபதியாக மாற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அவர் மீண்டும் எதிர்க்கட்சிக்கு வர முடியாது. இந்தச் சூழலில்தான் சர்வஜன அதிகாரம் உங்களுக்கு உதவும், நாட்டுக்கும் உதவும். இந்த அரசாங்கத்தின் கால்களை நாங்கள் கட்ட விரும்பவில்லை. அவர்களுக்கு வழிகாட்ட விரும்புகிறோம். இந்த அரச உத்தியோகத்தரின் சம்பளத்தை 25% ஆல் அதிகரிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார, 6 மாதங்களில் அதிகரிக்கப்படும் என்றார். எனவே 6 மாதத்திற்கு ஒருமுறை எழுந்து நின்று அந்த சம்பள உயர்வை 6 மாதத்திற்கு ஒருமுறை உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் எதிர்கட்சியாக தைரியம் தருகிறோம். இப்போது 200 ரூபாவுக்கு பெற்றோலை கொடுக்க வழிகாட்டும் எதிர்கட்சிதான் எங்களுக்கும் வேண்டும்.
இந்த நாட்டிலிருந்து திருடிய திருடர்களை பிடித்து காலிமுகத்திடல் மைதானத்திற்கு கொண்டு வருவதை யார் தான் பார்க்க மாட்டார்கள். கடைசி திருடன் பிடிபடும் வரை துணிச்சலான எதிர்க்கட்சியாக அவர்களுடன் நிற்போம். நாங்கள் இந்த நாட்டை விட்டு வௌியே கொண்டுச் செல்லப்பட்ட டொலர்களை கொண்டு வர விரும்புகிறோம்" என்றார்.