Oct 19, 2024 - 10:06 PM -
0
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கரவின் போதைப்பொருள் கடத்தலில், ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் லபுகம, நிரிபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லலித் கன்னங்கரவுடன் தொடர்பு கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்கு மேலதிகமாக, பல்வேறு திருட்டுச் சம்பவங்களிலும் இவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் எனவும், சந்தேகநபர்களில் ஒருவருக்கு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபர்களிடம் இருந்து 8 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.