வடக்கு
மக்கள் தீர்மானிக்க வேண்டும்!

Oct 20, 2024 - 12:30 PM -

0

மக்கள் தீர்மானிக்க வேண்டும்!

சுமந்திரனுடைய ஒரே ஒரு எதிர்பார்ப்பு தலைமை பதவியை கைப்பற்றி விட வேண்டும் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட சுயேட்சை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.

யாழில் நேற்று (19) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சி எப்படி போனாலும் பரவியில்லை தலைமை பதவியை எடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் சுமந்திரன் இருக்கிறார். சிறிதரன் வெற்றி பெற்றாலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் ஆக இருந்தால் அந்த நடவடிக்கை மூலம் சிறிதரன் தன்னுடைய பதவியை இழக்க நேரிடும்.

தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதற்கு தீர்மானித்தால் அதனுடைய அனைத்து நன்மைகளும் சுமந்திரனுக்கு தான் சேரும் எனவே மக்கள் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05