Oct 20, 2024 - 01:34 PM -
0
சர்சஜன அதிகாரத்தால் மட்டுமே துணிச்சலான வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப முடியும் என அதன் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"சர்வஜன அதிகாரத்தை நாங்கள் தொலைநோக்கு பார்வையுடன் கட்டமைத்துள்ளோம். எங்களிடம் இருந்து மறைந்து வரும் நமது தேசபக்தியைக் காப்பாற்ற விரும்புகிறோம்.நாங்கள் ஒரு மூலோபாய அரசியல் பயணத்தை மேற்கொள்கிறோம். இந்த அரசியல் பயணத்தை நாங்கள் தைரியமாக எதிர்கொள்கிறோம்.இந்தத் தேர்தலில் நாங்கள் பிரதமராகப் போட்டியிடவில்லை, துணிச்சலான எதிர்க்கட்சியாகப் போட்டியிடுகிறோம். சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு, தவறு எனில் வேலையை நிறுத்தும் அளவுக்கு துணிச்சலான எதிர்க்கட்சிகளை உருவாக்குவோம்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மீண்டும் அங்கு அமர வைப்பதால் மக்களுக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படப் போகிறது? எரிவாயு சிலிண்டர் என்பது ரவி கருணாநாயக்கவின் கட்சி. அவரை தேசிய பட்டியலில் எம்.பியாக்கவே அவர்கள் அனைவரும் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்திற்காக ஓடுகிறார்கள். எங்களின் பதக்கம் மக்களின் கழுத்தில் தொங்கும் தேசத்தின் நம்பிக்கை பதக்கம்" என்றார்.