Oct 20, 2024 - 02:13 PM -
0
பிக் பாஸ் 8 ஆம் சீசன் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பான விஷயங்கள் எதுவுமே நடக்கவில்லை.
அடிதடி சண்டை போட்டுவிட்டு அது prank என ஏமாற்றுவது, முட்டையை பங்கு பிரிப்பதில் தகராறு என ஸ்கூல் பசங்க ரேஞ்சுக்கு தான் ஷோவில் சண்டைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தவாரம் இன்று (20) விஜய் சேதுபதியால் எவிக்ட் செய்யப்படும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜே விஷால், செளந்தர்யா, முத்துக்குமரன், ரஞ்சித், ஜெஃப்ரி, தீபக், ஜாக்குலின், சாச்சனா, தர்ஷா, அர்னவ் உள்ளிட்டவர்கள் இந்த வாரம் நாமினேட் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளாராம்.
இதற்கு ரசிகர்கள் பலர் அர்னவ் வெளியேறியதற்கு சந்தோஷப்பட்டு வருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அர்னவ்வின் முன்னாள் மனைவி திவ்யா சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.