செய்திகள்
மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Oct 20, 2024 - 05:08 PM -

0

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

 

குறித்த பெண்ணிற்கு எற்பட்டுள்ள சக்கரை வியாதி காரணமாக  ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சம்பவதினமான இன்று பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்ததையடுத்து உயிரிழந்துள்ளார்.

 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

--

Comments
0

MOST READ
01
02
03
04
05