Oct 20, 2024 - 05:46 PM -
0
மலையாளம், தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர வேடங்களிலும் யூடியூப் சேனல்களில் பேட்டிகள் கொடுத்து பிரபலமாகி வரும் நடிகை ஷகீலா தன் வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் விருப்பட்டு சினிமாவிற்கு வரவில்லை, குடும்ப சூழலால் சினிமாவிற்கு வந்தேன். அப்பா கிளப்புக்கு சென்று பணத்தை தொலைத்து விடுவார். அதனால் அம்மா மெஸ் வைத்திருந்தார், அதுவும் லாஸ் ஆகிவிட்டதால் வேறு வழியில்லாமல் சினிமாவிற்கு வந்தேன்.
ஆனால் எனக்கு பொலிஸ் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. என் உடலுக்கும் உயரத்திற்கு அது சரியாக வராது என்று நினைத்து அது முடியாமல் போய்விட்டது. அக்கா கர்ப்பமாக இருக்கும் போது அப்பா இறந்துவிட்டார், அப்போது நான் மலையாள படத்தில் நடித்திருந்தேன். அப்படத்தில் 25 ஆயிரம் சம்பளம் கேட்டேன்.
தயாரிப்பாளரும் கொடுத்ததால் அந்த படத்தில் நடித்தேன். பெரிய பெரிய இயக்குநர்கள் கொடுத்த வாய்ப்பை நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இந்த மாதிரி படத்தில் நடிக்கவில்லை. என்னை நடிக்க அழைத்த படத்தில் நடித்தேன்.
வயிற்று பசிக்கு சோறுவேண்டும், எவன் குடும்பத்தையும் அழிக்கல, எவன் கழுத்தையும் அறுக்கல, என் உடம்பு இருந்தது அதை காண்பித்து நடித்து சம்பாதித்தேன். இதனால் பல தயாரிப்பாளர்கள், பல தொழில்நுட கலைஞர்கள் நன்றாக வாழ்ந்தார்கள். எனக்கு ஆண்கள் ரசிகர்கள் அதிகமாக இருந்ததால் பெண்களுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது.
ஏன் என்றால் பல பேர் யாருக்கும் தெரியாமல் என் படத்தை தலையில் துணிப்போட்டுத்தான் பார்ப்பார்கள். பெண்களுக்கு என்மீது வெறுப்பு. ஒருமுறை திருநெல்வேலி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது கூட்டம் அதிகமாக வந்ததால் புர்கா போட்டுவர சொன்னார்கள். நானும் புர்கா போட்டு சென்றேன்.
படத்தில் திறந்துக்காட்டி நடிப்பவர் எப்படி புர்கா போடலாம் என்று செருப்பை கழட்டி அடிக்க வந்தார்கள். அப்போதே இனி புர்கா போடமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.