Oct 20, 2024 - 07:17 PM -
0
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பழுத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைய நெல்லியடி பொலிஸார், கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் இணைந்து இரத்த தானத்தினை வழங்கினர்.
கரவெட்டி மூத்தவினாயகர் ஆலய விழா மண்டபத்தில் இன்று (20) காலை ஆரம்பமானது.
ஸ்டெம் செல் (Stem cell transplantation -மூல உயிரணு) தானம் வழங்குதலின் விழிப்புணர்வை வைத்தியர்களான வைத்தியர் நிர்மலா பொன்சேகா Dr.Nirmalie Fonseka , consultant Transfusion Physician,Jaffna teaching hospital,யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் நிதர்சினி பாலசிங்கம் ஆகியோர் வழங்கினர்.
தலசீமியா, இரத்தப் புற்றுநோய், எபிலாஸ்டிக் அனீமியா போன்ற நோய்களை தோற்கடிப்பதற்கு ஸ்டெம் செல் (Stem cell transplantation -மூல உயிரணு) தானம் வழங்குபர்களை பதிவுசெய்து கொண்டனர்.
இதன் போது மூல உயிரணு தானம் மற்றும் இரத்த தானத்தை நூற்றுக் கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கொலின்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு தானம் வழங்கினர்.
--