விளையாட்டு
டி-20 உலக கிண்ணத்தை சுவீகரித்த நியூசிலாந்து மகளிர் அணி

Oct 20, 2024 - 11:02 PM -

0

டி-20 உலக கிண்ணத்தை சுவீகரித்த நியூசிலாந்து மகளிர் அணி

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் டி-20 உலக கிண்ணத்தை நியூசிலாந்து மகளிர் அணி வென்றுள்ளது.

 

தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக இன்று டுபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியிலேயே அந்த அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி  20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

 

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்ற நிலையில், தோல்வியை தழுவியது.

 

இதன்படி நியூசிலாந்து மகளிர் அணி முதல்முறையாக  உலக கிண்ணம் ஒன்றை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05