Oct 21, 2024 - 08:03 AM -
0
கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மதுபானம் அருந்திவிட்டு மேல் கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.