செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி

Oct 21, 2024 - 08:43 AM -

0

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி

ராகம, தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியொன்றில், தேவத்தையில் இருந்து தம்புவ சந்தி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

கந்தலியத்தபாலுவ, ராகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05