Oct 21, 2024 - 10:42 AM -
0
நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறைவான படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லக் கூடிய கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிடுவார். சில ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாவிலேயே பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். ஆனால், தற்போது புதுப்புது நாயகிகளின் வருகையால் பெரிய கவனம் கிடைக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கும் யோகா மாஸ்டரான லவல் தவானுக்கும் விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள லவல் தவானின் யோகா மையத்தில் கடந்தாண்டு யோகா கற்க ரம்யா பாண்டியன் இணைந்துள்ளார். சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷில் நவம்பர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.