Oct 21, 2024 - 12:31 PM -
0
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் 24ஆம் திகதி புனேயில் தொடங்குகிறது.
இந்த டெஸ்டில் விக்கெட் காப்பாளரான ரிஷப் பண்ட் ஆட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் 2ஆவது டெஸ்டில் இருந்து விலகுவார்.
முதல் டெஸ்ட் போட்டியின்போது அவ ருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் களத்தடுப்பில் செய்யவில்லை. துருவ் ஜூரல் விக்கெட் காப்பாளராக செயற்பட்டார். அதே நேரம் அவர் துடுப்பெடுத்தாடி 99 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க காரணமாக இருந்தார்.
ரிஷப் பண்டின் காயம் குறித்து அணி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் இருப்பதாக அணித்தலைவர் ரோகித் சர்மா ஒப்பு கொண்டார். இதனால் அவர் 2ஆவது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
ரிஷப்பண்ட் விளையாட முடியாமல் போனால் 2ஆவது டெஸ்டில் துருவ் ஜூரல் இடம் பெறுவார்.