செய்திகள்
மீன்பிடி துறைமுகத்தில் தீ

Oct 21, 2024 - 01:11 PM -

0

மீன்பிடி துறைமுகத்தில் தீ

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று (21) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் இருந்த 3 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.

 

'துஷானி' என்ற மீன்பிடி படகில் தீ பரவியதாகவும், தீயினால் படகு முற்றாக எரிந்து நாசமானதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

தீயினால் படகுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீண்டநாள் மீன்பிடி படகு உள்ளிட்ட சிறிய படகொன்றும் சேதமடைந்துள்ளன.

 

எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05