Oct 21, 2024 - 01:53 PM -
0
நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்திற்குப் பின் 'கூலி' படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, சில நாள்களுக்கு முன் ரஜினிக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி இணைய உள்ளதாகவும் படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் திகதி வெளியாகும் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், 'கோட்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் ரஜினியைச் சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் இந்தக் கூட்டணி இணையவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.