Oct 21, 2024 - 02:59 PM -
0
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பலமான எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை பொது மக்கள், சர்வஜன அதிகாரத்தித்திற்கு வழங்க வேண்டும் என அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இப்போது எமது ஜனாதிபதி அநுர குமார ஒரு திட்டமில்லாமல் ஜனாதிபதியாக இருப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.
அநுரகுமாரவுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம், நாங்கள் எதிர்க்கட்சிக்கு வருகிறோம், நீங்கள் உங்கள் அரசாங்கத்தை அமையுங்கள், நாங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவோம்.
இப்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு உதவுவோம்.
உகாண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும். நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும்.
அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் என்ன? அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் என்ன, ஆணைக்குழுக்கள் எவ்வாறு நிறுவப்படுகின்றன? இது எங்கள் திட்டத்தில் உள்ளது.
இழந்த செல்வத்தை மீட்டெடுக்கும் பணியை அனுரகுமாரவால் செய்ய முடியும். .சஜித் பிரேமதாசவை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக்க எந்த காரணமும் இல்லை.
ஏனென்றால் இப்போது பாடசாலைகளுக்கு பேருந்துகள் வழங்கி முடிந்து விட்டால், கணினி அறைகளும் திறக்கப்பட்டிருந்தால், ஹரிணி அமரசூரிய சொன்னது போல் பாடசாலைகளுக்கு செல்ல அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டால், இப்போது பேருந்து ஊடாக செல்ல முடியாது, கணினியை எடுத்துக் கொண்டு ஸ்மார்ட் கிளாஸ் போக முடியாது. அவர் எதிர்க்கட்சித் தலைவரானால், எதுவும் செய்வதற்கில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் தேவையற்றவர் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர்" என்றார்.