Oct 21, 2024 - 04:14 PM -
0
DFCC வங்கி, Bikeathon & Ride to Save Lives பிரச்சாரம் 2024 க்கான தங்க அனுசரணையை வழங்கி, உத்தியோகபூர்வ வங்கிச்சேவை கூட்டாளராக Courage Compassion Commitment (CCC) Foundation உடன் கைகோர்ப்பது குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. தற்கொலை குறித்த விழிப்புணர்வு மற்றும் அவற்றைத் தடுப்பதை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்ற இந்த வலுவான முயற்சியானது, ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நெருக்கடி தொடர்பில் அவசர ஆலோசனை உதவிகளை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 1333 என்ற கட்டணமின்றிய தொலைபேசி அழைப்பு மையம் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, இலங்கையில் 13 தினங்களாக, 1,333 கிலோமீட்டர் தூரம் கொண்ட பயணத்தை ஓட்டுனர்கள் நிறைவு செய்துள்ளதுடன், இந்த மையம் வழங்கும் உயிர் காக்கும் தொழிற்பாடுகளை விரிவுபடுத்தி, தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியமான நிதியையும் திரட்ட உதவியுள்ளனர்.
தனது சமூகங்களுக்கான ஆதரவை வலுவாக வெளிக்காண்பிக்கும் வகையில், DFCC வங்கியின் விசாலமான கிளை வலையமைப்பின் பணியாளர்கள் பல்வேறு இடங்களில் சவாரியிலும், நடைபவனியிலும் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகளிலும் பங்குபற்றி இப்பிரச்சாரத்தில் இணைந்து கொண்டதுடன், இந்த நற்காரியத்தின் மீது வங்கியின் அர்ப்பணிப்பை காண்பித்துள்ளனர். உள மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு மக்களை ஊக்குவிப்பதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்புடன் இந்த முயற்சி தங்குதடையின்றி ஒன்றியுள்ளது. தன்னுடன் தொடர்புபட்ட தரப்பினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவித்து, அர்த்தமுள்ள நற்காரியங்களை மேம்படுத்துவதில் வங்கியின் பரந்தளவிலான நிலைபேற்றியல் மூலோபாயத்துடனும் இது ஒன்றியுள்ளது. 1333 Bikeathon க்கு மனமுவந்து தாராளமான உதவிகளை வழங்கியுள்ள DFCC வங்கி, உள ஆரோக்கியம் மற்றும் நலனை முன்னின்று வழிநடாத்தி வருகின்ற DFCC வங்கி, நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் தனது அர்ப்பணிப்பைக் காண்பித்துள்ளது.
DFCC வங்கியின் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திமால் பெரேரா அவர்கள் இக்கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது சமூகங்களின் நலனுக்கு உதவுவதில் எமது அர்ப்பணிப்பை 1333 Bikeathon உடனான எமது ஒத்துழைப்பு பிரதிபலிக்கின்றது. இந்த முக்கியமான முயற்சியின் உத்தியோகபூர்வ வங்கிச்சேவை கூட்டாளர் என்ற ரீதியில், தற்கொலை மற்றும் உள ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உதவி, 1333 அவசர உதவி சேவை மையத்திற்கு நிதியை திரட்டுவதற்கு உதவ எம்மால் முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த நற்காரியத்திற்கு உதவுவதன் மூலமாக, இலங்கையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நபர்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் நீண்ட காலம் நீடிக்கின்ற மற்றும் நேர்மறை விளைவைத் தோற்றுவிக்க முடியும் என்று நம்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு இடம்பெற்ற 13 தினங்களில், முக்கிய மையங்களை பங்கேற்பாளர்கள் கடந்து சென்றதுடன், உள்நாட்டு சமூகங்கள் மத்தியில் நேர்மறை மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தற்கொலை மற்றும் உள ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வுகளில் அச்சமூகங்கள் ஈடுபட்டன. இப்பயணம் சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினத்தையொட்டியதாக, செப்டெம்பர் 10 ஆம் திகதியன்று மீண்டு கொழும்பை வந்தடைந்து நிறைவுபெற்றது. DFCC வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும் ஏனைய பணியாளர்களும் செப்டெம்பர் 10 ஆம் திகதியன்று இரத்மலானையிலிருந்து சுதந்திர சதுக்கம் வரை நடைபெற்ற சவாரியில் இணைந்து கொண்டனர். DFCC வங்கியும், அதனுடன் தொடர்புபட்ட தரப்பினரும் காலிமுகத்திடலில் இருந்து நடைபெற்ற Walk the Talk எனும் இறுதிக்கட்ட நடைபவனியில் பங்குபற்றியதுடன், தற்கொலையைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்து, சுதந்திர சதுக்கத்தைச் சென்றடைந்து, நிறைவு நிகழ்வுகளிலும் பங்குபற்றினர்.
1333 என்ற அவசர உதவி மையமானது, இலங்கையில் ஒரு தனித்துவமான மற்றும் இலவசமான தொலைபேசி வழி உளவள ஆலோசனை சேவையாகக் காணப்படுவதுடன், தனிப்பட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்ற மக்களுக்கு அல்லது தமது பிரச்சனைகள் குறித்து ஒருவருடன் கலந்துரையாட விரும்புகின்றவர்களுக்கு உளரீதியான உதவி மற்றும் வழிகாட்டலை வழங்குகின்றது. பிரச்சினைகளை செவிமடுத்து, உதவி புரிவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட தொலைபேசி வழி உளவள ஆலோசனை வழங்குநர்களுடன் அழைப்பினை ஏற்படுத்துகின்றவர்கள் உரையாடி, உளவள ஆலோசனையும், ஏனைய உதவி சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அவசர சேவை மையம் முழுமையாக அந்தரங்கமான மற்றும் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் குறிப்பாக தார்மீக தரங்களின் அடிப்படையிலான தீர்ப்புக்களை வழங்குவதை தவிர்த்து அவற்றை வழங்கி வருவதுடன், அழைப்பினை மேற்கொள்ளும் அனைவரும் உச்சபட்ச கண்ணியம் மற்றும் கவனிப்புடன் நடாத்தப்படுவதை உறுதி செய்கின்றது.
1333 Bikeathon சவாரியாளர்கள் தமது இலக்கினை எட்டியுள்ள நிலையில், இப்பிரச்சாரத்தின் தாக்கம் இலங்கை எங்கிலும் உணரப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட நெருக்கடிகளுக்கான ஆதரவு மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பில் தேவையின் முக்கியத்துவம் குறித்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. இம்முயற்சியின் முக்கிய கூட்டாளர் என்ற ரீதியில், DFCC வங்கியின் ஆதரவு, சமூக பொறுப்புணர்வு மற்றும் நிலைபேணத்தக்க அபிவிருத்தி ஆகியவற்றின் மீதான அதன் அர்ப்பணிப்பை வலுவாக காண்பித்துள்ள அதேசமயம், இலங்கை மக்கள் அனைவரதும் நலன் குறித்து நேர்மறை மாற்றத்தை முன்னெடுப்பதில் அது முன்னின்று உழைப்பதையும் மீள வலியுறுத்தியுள்ளது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand மற்றும் Euromoney இன் Market Leader and Best in Service in Cash Management 2022 and 2023 உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund - GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.