செய்திகள்
கம்பஹா மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Oct 21, 2024 - 07:38 PM -

0

கம்பஹா மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

 

அதன்படி, வத்தளை, மாபொல, ஜா-எல, கட்டுநாயக்க - சீதுவை நகரசபை பகுதிகள், வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05