Oct 22, 2024 - 10:48 AM -
0
தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள மூலிகை சார்ந்த Swadeshi Industrial Works PLC ஆனது, அண்மையில் நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ‘சுதேசி Star Sales Awards 2023/24’ விழாவை நடாத்தியிருந்தது. விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிப்பதற்காகவும், பொது மற்றும் நவீன வர்த்தக பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வர்த்தக பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் இலங்கை பாரம்பரியத்தை இணைக்கும் சுதேசியின் முக்கியமான பண்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா பாரம்பரிய மேள தாளங்களுடன் ஆரம்பமானது. நிறுவனத்தின் முன்னோக்கிய பயணத்தை அடையாளப்படுத்தும் வகையில் பிரபல 'தன்னோ புன்துன்கே' எனும் மெல்லிசையுடன் ஆரம்பமாகி, நிறுவனத்தின் எதிர்கால பயணத்தை எடுத்துக்காட்டும் 'ரைஸ் அப்' எனும் எழுச்சியூட்டும் இசையாக மாறியது.
சுதேசியின் பிரதித் தலைவரும் நிர்வாகப் பணிப்பாளருமான சுலோதரா சமரசிங்க வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, நிறுவனத்தின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்பு, குழுப்பணி மற்றும் கடின உழைப்பின் அவசியத்தை அவர் தனது வரவேற்பு உரையில் எடுத்துரைத்தார். தமது சாதனைகளை மீள நினைவூட்டி உற்சாகப்படுத்தவும், அவர்களை கொண்டாடவும் இந்நிகழ்வு நடத்தப்படுவதாக தெரிவித்த அவர், மகத்துவத்தை அடைவதற்காக எல்லைகளைத் தாண்டுவது அவசியம் எனவும் கூறினார்.
இந்த உரையைத் தொடர்ந்து, சுதேசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில உடவத்த, கடந்த வருடத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக் கூறியதோடு, 2024/25 நிதியாண்டுக்கான மூலோபாயங்களையும் அவர் சுட்டிக் காட்டினார். புத்தாக்கம், ஒத்துழைப்பு, மற்றும் நிறுவனத்தின் வலுவான தொடர்பை தொடர்ச்சியாக பேணுதல் ஆகியவற்றிலும் அவரது உரை கவனம் செலுத்தியிருந்தது. தனிநபர் பராமரிப்புத் துறையிலான மேம்பாட்டின் அவசியத்தையும் அமில உடவத்த இங்கு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, ‘இஸ்துதி ஸ்ரீ லங்கா’ (நன்றி ஶ்ரீ லங்கா) எனும் விசேட நடன நிகழ்வும் இடம்பெற்றது. சுதேசி உள்நாட்டு விழுமியங்களில் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது சுட்டிக் காட்டுகிறது. இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, இங்கு கூடியிருந்தோர் முன்னிலையில் நிறுவனத்தின் உற்பத்தியான புதிய சுதேசி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மேலதிக இணைப்பாகும். இந்த புதிய தயாரிப்பானது, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, துர்வாடைகளிலிருந்தான நீண்ட நேர பாதுகாப்பை வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர்தர, தனிநபர் மூலிகைப் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதில் சுதேசி கொண்டுள்ள உறுதிப்பாட்டுடன் இத்தயாரிப்பு இணைகின்றது.
இவ்விழாவைத் தொடர்ந்து அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்டார் விற்பனை விருதுகள் நிகழ்வு இடம்பெற்றது. இதில் விற்பனையில் சிறந்து விளங்கியோர் அவர்கள் வழங்கிய விலைமதிப்பிட முடியாத பங்களிப்புகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த வணிக பங்காளர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வானது, இறுதியில் சுதேசி குழுவின் குழுப்பணிக்கு வலு சேர்க்கும் விசேட சுதேசி குழுப் பாடலுடன் நிறைவு பெற்றது.
நிகழ்வு முழுவதும், நிலைபேறான தன்மை மற்றும் நெறிமுறை நடைமுறைகளில் சுதேசியின் அர்ப்பணிப்பு ஆகியன அது முடியும் வரை தெளிவாகத் தெரிந்தது. இலங்கையின் முன்னணி மூலிகை பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் வகையில், நிறுவனமானது சிறந்த தரத்தை உறுதி செய்வதற்காக, உன்னிப்பான ஆய்வு மற்றும் பரிசோதனைகளின் கீழ், உள்நாட்டில் பெறப்பட்ட மிகச்சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறது. எப்போதும் பிரபலமாக திகழும் சுதேசி கொஹொம்ப மற்றும் ராணி சந்தன சவர்க்காரம் உள்ளிட்ட அதன் அனைத்து தயாரிப்புகளும் 100% சைவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்தோடு, இவை விலங்குகள் மீதான கொடுமை அற்றவை என்பதோடு, UK இன் சைவ உணவு சங்கத்தின் அங்கீகாரம் பெற்றவையாகும். சுதேசியின் முழுக் கவனமும் நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளில் உள்ளதோடு, அதன் உற்பத்திச் செயன்முறையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது பரவிக் காணப்படுகிறது. இது, ஆரோக்கியமான மற்றும் சூழல் நட்புணர்வுள்ள தெரிவுகளை நுகர்வோர் மேற்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
சுதேசியின் 80 ஆண்டு கால மரபானது, நிலைபேறான தன்மை, நெறிமுறை நடைமுறைகள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான அதன் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1941 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் போன்ற புகழ்பெற்ற தயாரிப்புகளுடன் இன்று வரை தனிநபர் மூலிகைத் தயாரிப்பு சந்தையில் தொடர்ச்சியாக முன்னணியில் உள்ளது. சுதேசியின் அனைத்து தயாரிப்புகளும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ISO 9001-2015 சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரத் தரங்களைப் பூர்த்தி செய்கின்றன. அதன் வாசனைத் திரவியங்கள் யாவும் சர்வதேச நறுமண சங்கத்தால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதோடு, மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்வதை அவை உறுதி செய்கின்றன.
சுதேசி Star Awards 2023/24 ஆனது, விற்பனை சாதனைகள் மற்றும் புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் நெறிமுறை நடைமுறைகளுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல் ஆகிய இரண்டு விடயங்களின் கொண்டாட்டமாகும்.