Oct 22, 2024 - 12:04 PM -
0
மலையகம் எமது தாயகம் என்ற அமைப்பின் ஊடாக சுயேட்சை குழு 2 இல் கோடரி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் தேர்தல் பிரச்சார கூட்டம் பொகவந்தாலவை செப்பல்டன் தோட்டத்தில் நடைபெற்றது.
தோட்டத்து அம்மன் ஆலயத்தில் வேட்பாளர்களுக்கு ஆசி வேண்டி இடம் பெற்ற விஷேட பூஜையின் பின்னர் வேட்பாளர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்கு உரையாற்றினர்.
மலையகத்தின் அனைத்து கட்சிகளும், மனோ கணேசன், ஜீவன் தொண்டமான் உட்பட இணைந்து ஓர் அணியாக தேர்தலில் களம் இறங்கி இருந்தால் தாமும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து இருப்போம் என தெரிவித்தனர்.
--