செய்திகள்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை!

Oct 22, 2024 - 12:56 PM -

0

 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

இதன்படி, அதன் தவிசாளராக கலாநிதி பந்துர திலீப விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.

 

அந்த ஆணைக்குழுவின் ஏனைய  உறுப்பினர்களாக,

 

* டபிள்யூ. ரவி பிரசாத் டி மெல் - சிரேஷ்ட விரிவுரையாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

 

* கலாநிதி நமாலி தரங்க சிறிசோம - ஶ்ரீமத் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்

 

 * ஏ. ஐ. யூ.  பெரேரா - உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் 
 
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கீழே...
 

Comments
0

MOST READ
01
02
03
04
05