Oct 22, 2024 - 03:24 PM -
0
கொமர்ஷல் வங்கி மற்றும் இலங்கையின் முன்னணி நில ஆதன தரகு நிறுவனமான கப்பிடல் ட்ரஸ்ட் ப்ரொபர்ட்டிஸ் (Capital Trust Properties) ஆகியவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பின் மூலம் வீடுகளை கொள்வனவு செய்ய விரும்பும் இலங்கையர்களுக்கு உற்சாகமான புதிய வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு பேராற்றல் வாய்ந்த பெருநிறுவனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MoU) வருங்கால வாடிக்கையாளர்களை கொமர்ஷல் வங்கிக்கு நிதியுதவிக்காக வழிநடத்துவதற்கும் கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன் மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கும் கப்பிடல் ட்ரஸ்ட் ப்ரொபர்ட்டிஸுக்கு வாய்ப்பினை வழங்குகிறது.
கப்பிடல் டிரஸ்ட் ஹோல்டிங்ஸின் (Capital Trust Holdings) துணை நிறுவனமான கப்பிடல் டிரஸ்ட் ப்ரொபர்ட்டிஸ் அதன் சொந்த மாடி குடியிருப்பு திட்டங்களான கப்பிடல் டிரஸ்ட் திம்பிரிகஸ்யாயா மற்றும் வஜிரா வீதி ஆகியவற்றிலும் டிரைசன் ஹேவ்லாக் சிட்டி ஷங்ரிலா கப்பிடல் ட்வின்பீக்ஸ் ப்ரைம் யோலோ மற்றும் ஐகானிக் கேலக்ஸி போன்ற உயர்தர மாடி குடியிருப்பு திட்டங்களிலும் பரந்த அளவிலான குடியிருப்புகளை வழங்குகிறது.
கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் - சில்லறை வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் திரு ஹஸ்ரத் முனசிங்க தெரிவிக்கையில் — இந்தப் பங்காளித்துவத்தின் மூலம் அவர்களின் கனவு இல்லங்களைத் தேடும் தனிநபர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். போட்டி விலையில் பலதரப்பட்ட வீட்டுக் கடன் தயாரிப்புகளுடன் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு மிகவும் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது. எங்கள் இரு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு பலரின் வீட்டு உரிமையின் அபிலாஷைகளை யதார்த்தமாக மாற்ற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். 2024 மார்ச் 31 இல் 72.965 பில்லியன் வீட்டுக் கடன்தொகையினைக் கொண்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வீட்டுக் கடன் துறையில் சந்தைத் தலைமையை அடைந்த இலங்கையின் முதல் தனியார் துறை வங்கியாக கொமர்ஷல் வங்கி விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன்கள் நிலம் வீடு அடுக்குமாடி குடியிருப்பு வீடு கட்டுதல் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை நிறைவு செய்தல் ஏற்கனவே உள்ள வீட்டைப் புதுப்பித்தல் அல்லது பெருப்பித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வீடு தொடர்பான கடனைத் தீர்த்துக்கொள்ளல் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகின்றன. வங்கியானது அதன் பொதுவான வீட்டுக் கடன்களைத் தவிர முதல் முறையாக வீட்டினை கொள்வனவு செய்பவர்கள் மற்றும் கட்டிடம் கட்டுபவர்களுக்கும் பசுமை வீட்டுக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு நாணய வீட்டுக் கடன்களுக்கும் தனியான கடன் திட்டத்தைக் கொண்டுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக கொமர்ஷல் வங்கியின் முதல் தடவை வீடு கொள்வனவு செய்பவர்கள் மற்றும் நிர்மாணிப்பவர்கள் திட்டமானது கடனை உள்ளடக்கும் ஒரு இலவச அல்லது தள்ளுபடியான கால உத்தரவாதக் கொள்கையை (DTAP) வழங்குகிறது இதன் மூலம் கட்டுமானச் செலவு அதிகரிக்கும் நேரத்தில் கடன் பாதுகாப்புக் காப்புறுதி செலவின் சுமையை நீக்குகிறது அல்லது குறைக்கிறது. கொமர்ஷல் வங்கியின் பசுமை வீட்டுக் கடன் என்பது சந்தையில் உள்ள மற்றொரு முதற்தரமான தயாரிப்பு ஆகும் இது பசுமைக் கட்டிடக் குழுவின் சான்றளிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன் சிறந்த வட்டி வீதத்தில் குடியிருப்பு சூரிய மின்சக்தி திட்டம் நிறுவல் உள்ளிட்ட பிற பசுமை முயற்சிகளுக்கும் நிதியளிக்க உதவுகிறது.
எஞ்சிய வீட்டுக் கடன்கள் மற்றும் ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்களை உள்ளடக்கிய 'நெகிழ்வான வீட்டுக் கடன்கள்' தெரிவுகளையும் கொமர்ஷல் வங்கி முன்னோடியாக மேற்கொண்டுள்ளது. EMI (சமமான முறை தவணை) மற்றும் நிலுவை முறைகளைக் குறைத்தல் போன்ற பாரம்பரிய முறைகளின் கீழ் மாதாந்த தவணை கணக்கிடப்படும் போது கடனைச் செலுத்தும் திறன் போதுமானதாக இல்லாத விண்ணப்பதாரர்களுக்காக இந்த தெரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய வீட்டுக் கடன்களின் கீழ் வாடிக்கையாளர்கள் கடனின் மூலதனத்தின் ஒரு பகுதியை மீளச் செலுத்தலாம் மற்றும் மிகுதியைத் மீளச் செலுத்துவதை ஒத்தி வைக்கலாம். ஸ்டெப்-அப் கடன்களைப் போலவே விண்ணப்பதாரரின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட வருமானத்தை மதிப்பீடு செய்த பின்னர் வடிவமைக்கப்பட்ட மீளச் செலுத்தும் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக வங்கியானது தொழில் வல்லுநர்கள் மற்றும் உயர் நிகர மதிப்புள்ள நபர்களுக்கு ஐந்தாண்டு கால அவகாசத்தை வழங்குகிறது அங்கு அவர்கள் சலுகைக் காலத்தில் வட்டியை மட்டுமே செலுத்த முடியும் அதன்பின்னர் சமமான மாதாந்த தவணை இருப்பு முறையைக் குறைத்தல் அல்லது வீட்டுக் கடன்களை ஒரு படி உயர்த்துதல் போன்ற ஏதேனும் ஒரு கிடைக்கக்கூடிய திருப்பிச் செலுத்தும் முறையின் கீழ் வட்டியுடன் சேர்த்து மூலதனத்தைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம்.
கொமர்ஷல் வங்கி இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி மற்றும் உலகின் சிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும். கொமர்ஷல் வங்கி திறன்மிகு முறையில் அமையப்பெற்ற கிளை வலையமைப்புக்கள் மற்றும் 974 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.