Oct 22, 2024 - 03:56 PM -
0
அபிவிருத்திகளை செய்வதற்கு எங்களுக்கு ஒரு காலம் கிடைத்தது. அந்த காலக்கட்டத்தில் தான் மலையகத்தின் அபிவிருத்திகள் உருவானது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொகவந்தலாவையில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் ஊழலற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி பார்த்தால் மக்கள் எங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும்.
JVP வழமையாக தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5,000 வாக்குகள் பெறுவார்கள், ஆனால் இந்த முறை தேர்தலில் 1 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளனர்.
மக்கள் சிந்தித்து ஊழலற்றவர்களுக்கு வாக்களிப்பது என்றால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
--