Oct 22, 2024 - 04:24 PM -
0
இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.