Oct 22, 2024 - 10:20 PM -
0
ஜீப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையொருவர், ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவமொன்று எஹெலியகொட பரகடுவ பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
கடந்த 19ஆம் திகதி மாலை எஹலியகொட, பரகடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தம்மை தெரிவித்துக் கொண்ட குழு ஒன்று ஜீப் வண்டியில் வந்துள்ளனர்.
வீட்டில் இருந்த 23 வயது இளைஞரை கைவிலங்கு போட முற்பட்ட போது, அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த இளைஞனை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.
இதன்போது, மகனை காப்பாற்ற குறித்த ஜீப் வண்டியில் அவரது தந்தை தொங்கிய நிலையில், ஜீப் வண்டியை நிறுத்தாமல் செலுத்தியதால் அவர் அதில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதன்போது ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி தந்தை படுகாயமடைந்தார்..
படுகாயமடைந்த 65 வயதுடைய தந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞன் எஹலியகொட, பனாவல பிரதேசத்தில் உள்ள பாறை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் மீது அமில வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டு விட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற அந்த இளைஞன், நடந்த சம்பவத்தை தனது உறவினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
அதன்படி அந்த இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அயல் வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட தகராறே இந்த கடத்தலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடியிருப்பாளர்கள் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் அவர்கள் யாருடைய ஒப்பந்தத்தின் பேரில் இதைச் செய்தார்கள் என்பது குறித்தும் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் உள்ள குறித்த இளைஞன் இன்று (22) பிற்பகல் தனது தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டுக்கு வந்திருந்தார்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Ur8RjQRbaMo?si=sLI2kIpeDIJ6mEgH" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>