Header Logo
Vallibel FD
Selan Bank
ஜோதிடம்
இந்த வார ராசி பலன்கள்!

Oct 23, 2024 - 08:46 AM

இந்த வார ராசி பலன்கள்!
Mobitel Inner 1278

மேஷம் - 10.10.24 முதல் 26.10.24 வரை

 

எல்லோரையும் எளிதில் வசீகரிப்பீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்னைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும்.

 

பரிகாரம்: ஸ்ரீ மகா கணபதியை வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

ரிஷபம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

செயல்திறமை அதிகரிக்கும். ராசியை பார்க்கும் ராசிநாதன் சுக்கிரனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சி கை கொடுக்கும். மகிழ்ச்சியான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

 

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வர எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

 

மிதுனம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கடினமான காரியங்கள் கூட சுலபமாக முடிந்துவிடும். ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதன் மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான சுபச்செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் திடீர் பயணங்கள் செல்ல நேரலாம். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

 

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை புதன்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.

 

கடகம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

எதிலும் முன்னேற்றம் காணப்படும்.விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடை நீங்கும். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் நீங்கும். குடும்பம் பற்றிய கவலைகள் அகலும். குருவின் பார்வையால் உடல் ஆரோக்கியம் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். பெண்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். கலைத்துறையினர் தங்கள் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பர். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பது நல்லது.

 

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

 

சிம்மம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். செயல்களில் வேகம் உண்டாகும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மிகுந்த நன்மைகள் வந்து சேரும் காலகட்டம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.அவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவார்கள். கலைத்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடும். முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும்.

 

பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும்.

 

கன்னி - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண வரவு வரும். திடீர் சோர்வு அகலும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு எதை செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்த்து செயல்பட வேண்டும். மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

 

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டுவர எதிர்ப்புகள் அகலும்.

 

துலாம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

தெளிவான மனநிலை இருக்கும். புத்திகூர்மையுடன் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவி மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும்.

 

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவியை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

 

விருச்சிகம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே வந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவர். கலைத்துறையினருக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

 

பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

 

தனுசு - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். தொழில், வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு புதிய நட்பு கை கொடுக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும்.

 

மகரம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட சீக்கிரமாகவே வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்னைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்னைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது துரிதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

 

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவானை பிரார்த்தனை செய்து வழிபட்டு வர மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

 

கும்பம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

சுபச்செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினர் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

 

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும்.

 

மீனம் - 20.10.24 முதல் 26.10.24 வரை

 

எல்லா நன்மைகளும் உண்டாகும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்னை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும்.

 

பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும்.
 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278