சினிமா
பிரபல நடிகர் மீண்டும் கைது!

Oct 23, 2024 - 09:00 AM -

0

பிரபல நடிகர் மீண்டும் கைது!

நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷை பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.

 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் முகேஷ். பிரபல தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் ஆவார். தற்போது கொல்லம் தொகுதி சிபிஎம் எம்எல்ஏவாக உள்ளார்.

 

இந்தநிலையில் நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சியை சேர்ந்த ஒரு நடிகை பொலிஸில் புகார் செய்தார்.

 

இந்தநிலையில் கடந்த மாதம் நடிகர் முகேஷை மரடு பொலிஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 

இதற்கிடையே ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகையும் முகேஷுக்கு எதிராக ஒரு பாலியல் புகார் கொடுத்திருந்தார். கடந்த 2011ல் திருச்சூர் அருகே உள்ள வாழானிக்காவு என்ற இடத்தில் வைத்து நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்தநிலையில் இரவு நடிகர் முகேஷை பொலிஸார் மிகவும் ரகசியமாக வடக்காஞ்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நடிகர் முகேஷ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05