Oct 23, 2024 - 09:06 AM -
0
ரம்யா கிருஷ்ணனுக்கும், அவரது கணவரும் தெலுங்கு பட இயக்குனருமான கிருஷ்ண வம்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். மேலும் அவர்களுக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது என கடந்த சில நாட்களாக பேசப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும், கணவர் ஐதராபாத்திலும் இருக்கிறார். இதை வைத்து தான் இந்த பேச்சு தொடங்கியது. ‘இது முழுக்க முழுக்க புரளி தான். யார் பார்த்து விட்ட வேலை என்று தெரியவில்லை. அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள்’ என்று சலிப்புடன் கூறியுள்ளார் வம்சி.
மேலும் அவர் கூறும்போது, ‘நானும், ரம்யா கிருஷ்ணனும் பிரியவில்லை. நாங்கள் விவாகரத்து பெறவில்லை. வேலை காரணமாக நான் ஐதராபாத்தில் இருக்கிறேன். அவ்வளவு தான். உடனே விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்வதை கேட்கும்போது வேதனை அளிக்கிறது. ரம்யா ஒரு நல்ல மனைவி, நல்ல அம்மா’ என்று தெரிவித்துள்ளார்.