சினிமா
ஞாபக மறதியால் அவதிப்படும் சமந்தா!

Oct 23, 2024 - 09:12 AM -

0

 ஞாபக மறதியால் அவதிப்படும் சமந்தா!

சமீபத்தில் சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்தது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

சமீபத்தில் அவர் நடித்த ‘சிட்டாடல்’ வெப்சீரிஸின் புரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தா பெற்று வருகிறார்.

 

இந்நிலையில், சமந்தா அளித்த பேட்டியொன்றில், ‘எனக்கு வந்த மயோசிடிஸ் நோய் காரணமாக பல விஷயங்களை நான் மறுந்துவிட்டேன். ஞாபக மறதியால் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். ஒரு சமயம், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரும் இல்லை. அதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறேன்’ என்று வேதனையுடன் சமந்தா பகிர்ந்துள்ளார்.

 

இப்படியெல்லாம் சமந்தா கஷ்டப்பட்டதை அறிந்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05