Oct 23, 2024 - 09:19 AM -
0
வெப் சீரிஸில் ஆபாச காட்சிகள் வெளியிட்ட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது தயார் மீது போக்சோ வழக்கை மும்பை பொலிஸார் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர், ஆபாச காமெடிகள், ஹாரர் படங்கள் போன்றவற்றை தயாரித்து வருகிறார். தற்போது 18 வயது நிரம்பியவர்கள் பார்க்கக்கூடிய சீரியல்களில் அரை நிர்வாணம், ஆபாச வசனங்கள் இடம்பெறுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏக்தா கபூர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாயார் ஷோபா கபூர் மீது மும்பை பொலிஸார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஏக்தா கபூரின் வெப் சீரிஸில், சிறுமிகளின் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான காந்தி பாத் தொடரின் ஆறாவது சீசனில், ஸ்ட்ரீம் செய்யப்பட்ட எபிசோட்டில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் வெளியாகின. தற்போது இந்த எபிசோட் ஸ்ட்ரீமிங் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை மாநகரின் எம்ஹெச்பி காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பம், போக்சோ உள்ளிட்ட 5 பிரிவின் கீழ், ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.