செய்திகள்
ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

Oct 23, 2024 - 11:26 AM -

0

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.

 

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

 

அதற்கமைய, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05