Oct 23, 2024 - 01:44 PM -
0
மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் எமில்காந்தன் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை நேற்று (22) முன்னெடுத்திருந்தார்.
வன்னித் தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்தில் பாலமோட்டை, பெரியமடு, சின்னக்கடை, நடுக்குடான் ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரக் கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுயேட்சைக் குழு 7 இன் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் ஆகியோர் குறித்த பகுதிகளுக்கு சென்று பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினர்.
இதன்போது மக்கள் தமது தேவைகள் தொடர்பாக தெரியப்படுத்தியதுடன், கடந்த கால்களில் அரசியல்வாதிகளால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்து தமது ஆதரவை வழங்கினர்.
எமில்காந்தின் பிரச்சார நடவடிக்கைகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.