Oct 23, 2024 - 02:18 PM -
0
ஒக்டோபர் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்ட தேசிய ஓய்வூதியர்கள் தினத்தில், இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எமது தாய்நாட்டிற்கான அவர்களது அயராத அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது. தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உங்கள் வாழ்க்கையின் முதன்மையான ஆண்டுகளை அர்ப்பணித்துள்ள நிலையில், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமாக தொடர்ந்து சேவை செய்ய வழிவகுக்கிறது.
உங்களது நீடித்த மரபை அங்கீகரித்து, உங்கள் நல்வாழ்வை ஆதரிப்பதற்காக, NDBயின் அர்ப்பணிப்புள்ள நிதி வழங்கல் திட்டமான, NDB ஆச்சாரா கடன் திட்டமானது, இலங்கையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான ஓய்வுக்காலத்திற்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இக்கடன் திட்டமானது ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், அவர்களின் பல ஆண்டு கால குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்குமான NDB இன் அர்ப்பணிப்பான செயற்பாட்டை பிரதிபலிக்கிறது.
NDB ஆச்சாரா கடன் திட்டமானது, இயலக்கூடிய மாதாந்த கொடுப்பனவுகளை உறுதி செய்யும் வகையில் அதிகபட்ச வயது வரம்பு 75 ஆண்டுகளுக்கு உட்பட்டு 15 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் அதிகபட்சமாக 4.5 மில்லியன் ரூபா கடன் தொகையை வழங்குகிறது. கடன்பெறுநர் காலமாகிவிடும் துரதிருஸ்டவசமான சந்தர்ப்பங்களிலும் கடனானது முழுமையாகத் தீர்க்கப்படுமாறாக, கடன்பெறுநர் மற்றும் அவர்களது குடும்பம் என இரண்டிற்கும் அமைதியான மனநிலையை உறுதிப்படுத்தி, இத்தனித்துவமான நிதித்தீர்வானது வாழ்நாள் காப்புறுதி கொள்கையுடனும் வருகின்றது. மேலதிகமாக, எந்த பாதுகாப்பும் கோரப்படாதது விண்ணப்ப செயல்முறையை நேரடியாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.
NDB ஆச்சாரா கடன் திட்டத்திற்குத் தகுதிபெற, விண்ணப்பதாரர் இலங்கை ஓய்வூதியத் திணைக்களத்திலிருந்து ஓய்வூதியத்தைப் பெறுபவராக இருத்தல் வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை NDB ஆச்சாரா கணக்கில் வரவு வைக்க வேண்டும். இந்தத் திட்டம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அதேவேளை நம்பகமான வங்கி பங்குடைமையின் பலன்களை அனுபவிக்கவும் அனுமதிக்கிறது.
ஓய்வுக்குப் பிந்தைய இலக்குகளை எளிதாகவும் சுதந்திரமாகவும் தொடர முடியும் என்பதை உறுதிசெய்து, NDB ஆச்சாரா கடன் திட்டம், ஓய்வூதியம் பெறுபவர்களின் நிதியியல் தேவைகளை ஆதரிப்பதில் NDB வங்கியின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகின்றது. வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை வழங்குவதன் மூலம், NDB அதன் முக்கிய பெறுமதியான சேவை மற்றும் உள்ளடக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிகின்றமையானது, அதன் வாடிக்கையாளர்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்ட வங்கியாக அதன் பங்கை வலுப்படுத்துகிறது.
NDB இலங்கையின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சேவை செய்வதில் பெருமிதம் கொள்வதுடன் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களின் கனவுகளை அடைய உதவும் தனிப்பயனாக்கப்பட்ட நிதியியல் உதவிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. இன்று நாங்கள் உங்களைக் கௌரவிக்கும்போது, நமது தேசத்தின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்புகள் மறக்கப்படாது, எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.