Oct 23, 2024 - 03:06 PM -
0
இந்நாட்டு அரசியலில் எஞ்சியிருக்கும் ஒரே எதிர்க்கட்சி சர்வஜன அதிகாரமே என அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் மாத்தறை மாவட்டத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று (23) சர்வஜன அதிகாரத்துடன் இணைந்து கொண்ட போதே அவர் இதனை அறிவித்தார்.
"இன்று நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே எதிர்க்கட்சியாக நாம் மாறிவிட்டோம். அதனால்தான் நாங்கள் துணிச்சலான எதிர்க்கட்சி என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் யதார்த்தத்தை மக்களுக்கு விளக்கி ஜனநாயகத்திற்கு தேவையான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். இந்த செல்வாக்கை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு சரியான திசையை காட்டவும், இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பின்னணியை உருவாக்கக்கூடிய பாராளுமன்றத்தை நோக்கி செல்வதும் அவசியமாகும்"
இதேவேளை, ஐக்கிய குடியரசு முன்னணியின் மாத்தறை மாவட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்துகொண்டது.
இதன்படி, மாத்தறை மாவட்ட அமைப்பாளராக ஏ.எச்.நெத்திகுமாரவும், தேசிய தொழிற்சங்க இணைப்பாளராக என்.ஜி.எஸ்.ஹெட்டியாராச்சியும், மாத்தறை மாவட்ட மகளிர் விவகாரம் மற்றும் மாத்தறை தொகுதி அமைப்பாளராக லட்சுமி கொடித்துவக்குவும் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும், மாத்தறை மாவட்ட விவசாய அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இணைப்பாளராக எச்.எம்.புண்யதிலக மற்றும் மாத்தறை மாவட்ட பிடல்கமுவ பிரிவு அமைப்பாளராக எச்.ஏ.மஹிந்த ஆகியோர் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீரவிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
பிரசன்ன ஆர். ஜாசிங்க சர்வஜன அதிகாரத்தின் டிஜிட்டல் மீடியா ஒருங்கிணைப்பாளராகவும், முஹம்மட் தௌபீக் சிராஜுதீன் சர்வஜன அதிகாரத்தின் முஸ்லிம் உறவுகளுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளராகவும் இன்று நியமிக்கப்பட்டனர்.