செய்திகள்
சம்பளத்தை அதிகரிக்க முடியாவிட்டால், ஒதுக்கப்பட்ட பணத்திற்கு நடந்தது என்ன?

Oct 23, 2024 - 04:42 PM -

0

சம்பளத்தை அதிகரிக்க முடியாவிட்டால், ஒதுக்கப்பட்ட பணத்திற்கு நடந்தது என்ன?

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தாம் எடுத்த சட்ட ரீதியான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்று (23) நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தினால் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால் அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05