செய்திகள்
மேற்கிந்திய தீவுகள் அணி 189 ஓட்டங்கள்

Oct 23, 2024 - 07:43 PM -

0

மேற்கிந்திய தீவுகள் அணி 189 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி, கண்டி- பல்லேகல மைதானத்தில் இன்று (23) ஆரம்பமானது.

 

இப்போட்டி மழை காரணமாக போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பமானது.

 

இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

 

இந்த போட்டியானது 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 36 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

 

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Sherfane Rutherford அதி கூடிய ஓட்டங்களாக 80 ஓட்டங்களையும் Gudakesh Motie ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் Wanindu Hasaranga 8 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களை கொடுத்த நிலையில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

இந்த போட்டியில் 190 ஓட்டங்களை பெற்றால் இலங்கை அணிக்கு வெற்றி கிட்டும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05