Oct 23, 2024 - 10:19 PM -
0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே கண்டி - பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டி மழை காரணமாக பிற்பகல் 4.30 மணியளவில் ஆரம்பமான நிலையில், 44 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 36 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்தணி சார்பாக ரதர்போர்ட் 80 ஓட்டங்களையும் Gudakesh Motie ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கட்டுக்களையும் அசித்த பெர்னாண்டோ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 38.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 62 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம மற்றும் நிஷான் மதுஷங்க ஆகியோர் தலா 38 ஓட்டங்கள் வீதம் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றதோடு, ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.